முகப்பு
சென்னை

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

சென்னை மயிலாப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

சென்னை மயிலாப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
பொன்னேரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பா.மோகன்குமார் (36). இவர் மயிலாப்பூர் பல்லக்குமா நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையிடம் கடந்த 10-ஆம் தேதி நடந்து வந்தார். அப்போது அங்கு இரு நபர்கள், மோகன்குமார் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். 
போலீஸார் விசாரணையில், செல்லிடப்பேசியை பறித்தது தண்டையார்பேட்டை சிவாஜி நகரைச் சேர்ந்த ரா.சிவா (19), திருவொற்றியூர் கம்பர் தெருவைச் சேர்ந்த ரா.விக்னேஷ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →