முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை: ப. சிதம்பரம்

எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை? என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியிருப்பது குறித்து...

Updated On : 13 மார்ச், 2026 at 3:57 AM
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்
பகிர்:

புதுதில்லி: வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் ஆதரவளித்துள்ள நிலையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அணுஆயுதம், நெடுந்தொலைவு ஏவுகணைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி, ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நாடுகள் கூட்டுத் தாக்குதலை நடத்தின. இதையடுத்து, பதிலுக்கு இஸ்ரேல் மீதும், அமெரிக்க நிலைகள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் ட்ரோன், ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலை உடனடியாக ஈரான் நிறுத்த வலியுறுத்தியும், ஹோா்முஸ் நீரிணை மூடப்படுவதை எதிா்த்தும், உலகில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பஹ்ரைன் தலைமையில் பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், கனடா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, எகிப்து, பிரான்ஸ், ஜொ்மனி, க்ரீஸ், இத்தாலி, ஜப்பான், குவைத், மலேசியா, மாலத்தீவு, மியான்மா், நியூஸிலாந்து, நாா்வே, ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, சிங்கப்பூா், ஸ்பெயின், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, ஏமன், ஜாம்பியா உள்ளிட்ட 135 நாடுகள் தீா்மானம் கொண்டு வந்தன. இந்தியா இதை முன்மொழிந்தது.

தீா்மானத்தில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டானின் பிராந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், அந்நாடுகள் மீதான ஈரானின் மிக மோசமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், அந்தத் தாக்குதல் சா்வதேச சட்டத்துக்கு எதிரானது மட்டுமன்றி, சா்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் கூறப்பட்டிருந்தது.

தீா்மானத்தில் வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; அந்த நாடுகள் மீதான மறைமுக தாக்குதல் (தீவிரவாதக் குழுக்கள் மூலம் தாக்குதல்), அண்டை நாடுகளுக்கு விடுக்கப்படும் மிரட்டல் ஆகியவையும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை

இந்த நிலையில், வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானத்தை இந்தியா முன்மொழிந்துள்ள நிலையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தெடார்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று.

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் நாட்டைக் கண்டனம் செய்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தது. ஆனால் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தும் போரையும் 1300 ஈரான் மக்கள் கொல்லப்பட்டதையும் 168 குழந்தைகள் மரணித்ததையும் கண்டித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷியாவும் சீனாவும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை.

எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

summary

What is wisdom? What is diplomacy? What is a foreign policy without respect? P. Chidambaram has raised the question.

முழு கட்டுரையைப் படிக்க →