முகப்பு
சென்னை

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

சென்னை திருமங்கலத்தில் மாடி கைப்பிடி சுவரில் அமர்ந்து செல்லிடப்பேசியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த தொழிலாளி நிலைத்தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

சென்னை திருமங்கலத்தில் மாடி கைப்பிடி சுவரில் அமர்ந்து செல்லிடப்பேசியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த தொழிலாளி நிலைத்தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நாகு (45). இவர் சென்னை அண்ணாநகர் பொன்னி காலனி 27-ஆவது தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். 
இதற்காக அந்த உணவகத்திலேயே நாகு தங்கியிருந்தார். இந்நிலையில் நாகு, ஞாயிற்றுக்கிழமை இரவு 2-ஆவது மாடியில் மாடிப்படி கைப்பிடி சுவரில் அமர்ந்து செல்லிடப்பேசியில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். 
அப்போது திடீரென நிலைத்தடுமாறி நாகு, அங்கிருந்து கீழே விழுந்தார். 
இதில் பலத்த காயமடைந்த நாகுவை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாகு இறந்தார். 
இதுகுறித்து திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →