சென்னை ஐஐடி ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வகத்தில் தீ விபத்து
சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட
சென்னைசென்னை ஐஐடி ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வகத்தில் தீ விபத்து
சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட
சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்துக்குப் பின் தீயைக் கட்டுப்படுத்தினர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆய்வகம் உள்ளது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்களும், ஐஐடி காவலர்களும் தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர்.
கிண்டி மற்றும் கோட்டூர்புரத்தில் இருந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து, சென்னை ஐஐடி பேராசிரியர்கள் கூறும்போது , 'தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் இப்போது தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆய்வகம் மூடப்பட்டுள்ளது. ஆய்வுகள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை' என்றனர் அவர்கள்.