ஈரான் போர்! பிரான்ஸின் மத்திய கிழக்கு ராணுவத் தளங்களில் அமெரிக்காவுக்கு அனுமதி!
மத்திய கிழக்கில் உள்ள பிரான்ஸ் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது...
உலகம்ஈரான் போர்! பிரான்ஸின் மத்திய கிழக்கு ராணுவத் தளங்களில் அமெரிக்காவுக்கு அனுமதி!
மத்திய கிழக்கில் உள்ள பிரான்ஸ் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது...
மத்திய கிழக்கில் உள்ள தங்களது சில ராணுவத் தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் பயன்படுத்த பிரான்ஸ் அரசு அனுமதியளித்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப். 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், ஈரானில் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதலில் ஈடுபடுவதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தங்களது சில ராணுவத் தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதியளித்துள்ளதாக, வியாழக்கிழமை (மார்ச் 5) பிரான்ஸ் ராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்க போர் விமானங்கள் வளைகுடா பகுதியில் உள்ள தங்களது கூட்டாளிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பழிதீர்க்கும் நடவடிக்கையாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மேலும், ஈரான் மீதான தாக்குதல்களுக்குத் தங்களது வான்வழியைப் பயன்படுத்தக் கூடாது என ஸ்பெயின் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.