சென்னை

சென்னையில் இயற்கை மருத்துவக் கண்காட்சி: நாளை தொடக்கம்

DIN

சென்னை அயனாவரத்தில் ஜீரோ தெரபி' எனப்படும் இயற்கை உணவுக் கண்காட்சி, கருத்தரங்கம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 23, 24) நடைபெற உள்ளது.
இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கூறியது: அயனாவரம் பேருந்து நிலையம் அருகே கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள ஜெயின் தாதாவாடி மைதானத்தில் சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் இக்கண்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது.
முதல் நாள் கண்காட்சியில் ரசாயனம் பயன்படுத்தப்படாத காய்கறிகள், அவற்றில் உள்ள சத்துகள் குறித்து டிஜிட்டல் முறையில் விளக்கப்படுகிறது. இதில் எந்தெந்த நோய்க்கு என்ன உணவு, எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்பது குறித்த விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெறும் கருத்தரங்கில் ஜீரோ தெரபி' உணவு முறையின் நிறுவனரான விபின் சந்த் பாம்ப் கலந்து கொண்டு மருந்தில்லா மருத்துவம்', இயற்கை உணவு முறை உள்ளிட்டவை குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.
அனுமதி இலவசம்: இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம் மருந்தில்லாமல் நம் உடலை பேணிக் காக்க உள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவதுதான்.
உடம்புக்குள் என்ன உணவு செல்கிறதோ அதைப் பொறுத்துதான் நம் ஆரோக்கியம் அமையும். நம் உடம்புக்கு ஒரு கோளாறு ஏற்பட்டால் அதை எப்படி சரி செய்து கொள்வது என்பதை நம் உடல் அறியும். 
இதை உணர்த்தும் வகையில் நடைபெறும் கண்காட்சி, கருத்தரங்கில் பார்வையாளர்கள் எந்த வயதினரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம் என்றார் ராஜேஷ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT