முகப்பு
சென்னை

மோடிக்கு அவமரியாதை செய்தவர் கைது

சென்னைக்கு கடந்த சனிக்கிழமை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, காரில் கலைவாணர் அரங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து

சென்னை

மோடிக்கு அவமரியாதை செய்தவர் கைது

சென்னைக்கு கடந்த சனிக்கிழமை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, காரில் கலைவாணர் அரங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

சென்னைக்கு கடந்த சனிக்கிழமை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, காரில் கலைவாணர் அரங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்ட தொழிலாளியை அண்ணா சதுக்கம் போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
தமிழக அரசின் சார்பில் மகளிருக்கு மானியத்துடன்கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை சென்னைக்கு வருகை தந்தார். 
தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், விமான நிலையத்திலிருந்து அடையாறு கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார். பின்னர் காரில் கலைவாணர் அரங்கம் நோக்கி புறப்பட்டார். அப்போது அவரை வரவேற்க சாலையின் இருபுறமும் திரளானோர் காத்திருந்தனர். அவரது கார் கடற்கரை சாலையை கடந்தபோது, ஜெயலலிதா நினைவிடம் அருகே நின்ற கூலித் தொழிலாளி ஒருவர் பிரதமரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்துகொண்டார். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில், இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, பிரதமரை அவமரியாதை செய்யும் வகையில் நடந்துகொண்ட சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பழனியை (46) வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →