முகப்பு
சென்னை

'அகராதியியல் களங்கள்' நூல் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறை, பிற மொழித் துறையினருடன் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் 'அகராதியியல் களங்கள்' நூல் வெளியிடப்பட்டது.

Updated On : 30 மார்ச், 2018 at 4:22 AM
பகிர்:

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறை, பிற மொழித் துறையினருடன் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் 'அகராதியியல் களங்கள்' நூல் வெளியிடப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160-ஆவது ஆண்டை முன்னிட்டு பன்னாட்டு கருத்தரங்கம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. 
ஹாங்காங் அறிவியல் பல்கலைக்கழக மொழிகள் மைய முன்னாள் இயக்குநர் கிரிகோரி ஜேம்ஸ், ஜப்பான் வசேடா பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் யமதா ஷிகேரு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் சுபதினி ரமேஷ், ஜப்பான் அமோரி பல்கலைக்கழக பேராசிரியர் தொஷிகசு யசோர், அமெரிக்க அறிஞர் பேட்ரிக் சதாசிவம், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கருணாகரன் உள்ளிட்டோர்ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். 
32 ஆய்வுக் கட்டுரைகள் 'அகராதியியல் களங்கள்' என்ற தலைப்பில் தமிழிலும், பட்ங் ஊழ்ர்ய்ற்ண்ங்ழ்ள் ஞச் கங்ஷ்ண்ஸ்ரீர்ஞ்ழ்ஹல்ட்ஹ் என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 
இவற்றை கிரிகோரி ஜேம்ஸ் வெளியிட அதன் முதல் படியை யமதா ஷிகேரு பெற்றுக் கொண்டார்.
கருத்தரங்கின் நோக்கங்கள் குறித்து கருத்தரங்கின் அமைப்புத் தலைவரும், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையின் தலைவருமான ஒப்பிலா மதிவாணன் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.