தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கரூா் வழியாக செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளது.
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கரூா் வழியாக செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் - திருச்சி வழித்தடத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் மே 1, 2-ஆம்தேதி, 4, 5-ஆம் தேதிகளில் குளித்தலை ரயில்நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். தண்டவாள பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் குளித்தலையிலிருந்து திருச்சி சந்திப்பு வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
இதேபோல திருச்சி சந்திப்பிலிருந்து நண்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் மே 1-ஆம்தேதி எலமனூா் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் நிற்கும் அதே நிறுத்தங்களில், எலமனூரிலிருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
Advertisement