சென்னை கடற்கரை-கொருக்குபேட்டை இடையே பராமரிப்பு பணி: நாளை, நாளை மறுநாள் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை கடற்கரை-கொருக்குபேட்டை இடையே 3 மற்றும் 4-ஆவது பாதையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1-ஆம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-கொருக்குபேட்டை இடையே 3 மற்றும் 4-ஆவது பாதையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1-ஆம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 31-ஆம் தேதி மாற்றிவிடப்படும் ரயில்கள்:
1. சூலூர்பேட்டை-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இரவு 7.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாற்றி விடப்பட்டு, சென்னை கடற்கரையை அடையும்.
2. கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரைக்கு இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாற்றி விடப்பட்டு, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வந்தடையும்.
பகுதி ரத்து: வேளச்சேரி-ஆவடிக்கு இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டு, வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.
ஏப்ரல் 1-ஆம் தேதி மாற்றிவிடப்படும் ரயில்கள்:
1. சென்னை கடற்கரை-அரக்கோணம் வரை அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் மாற்றிவிடப்பட்டு, மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து புறப்படும்.
2. ஆவடி-சென்னை கடற்கரை வரை காலை 8.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாற்றிவிடப்பட்டு, மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸை வந்தடையும்.
3. பட்டாபிராம் இராணுவ பகுதி-சென்னை கடற்கரை வரை காலை 8.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாற்றி விடப்பட்டு, மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸை வந்தடையும்.
4. சூலூர்பேட்டை-சென்னை கடற்கரைக்கு காலை 7.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாற்றிவிடப்பட்டு மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸை வந்தடையும்.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:
1. சென்னை கடற்கரை-பொன்னேரிக்கு காலை 5.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
2. சென்னை கடற்கரை-திருவள்ளூருக்கு காலை 5.30, 6.15 மற்றும் 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள்.
3. சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு அதிகாலை 4.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
4. சென்னை கடற்கரை-ஆவடிக்கு காலை 8.30 மற்றும் காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் சிறப்பு ரயில்கள்.
5. பொன்னேரி-சென்னை கடற்கரைக்கு காலை 7 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
6. ஆவடி-சென்னை கடற்கரைக்கு அதிகாலை 4.10, 4.25, காலை 6.05, 7.10 மற்றும் 7.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள்.
7. அரக்கோணம்-சென்னை கடற்கரைக்கு அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்.
பகுதி ரத்து: சென்னை கடற்கரை-பட்டாபிராம் இராணுவ பகுதி வரை காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டு, ஆவடியில் இருந்து பட்டாபிராம் இராணுவ பகுதி வரை மட்டும் இயக்கப்படும்.
நேர மாற்றம்: சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் 20 நிமிடம் தாமதமாக காலை 10 மணிக்கு புறப்படும்.
எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: சென்னை எழும்பூர்-தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், அரக்கோணம், திருத்தணி வழியாக ரேணிகுண்டாவை அடையும். இதுதவிர, சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.