முகப்பு
சென்னை

15 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் 15 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விசுவநாதன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

Updated On : 15 மே, 2018 at 3:37 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

சென்னை பெருநகர காவல்துறையில் 15 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விசுவநாதன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாலும் காவல் ஆய்வாளர்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 
இதன்படி 15 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விசுவநாதன் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். இதில், 8 காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள். அவர்கள் மீண்டும் காவல் நிலையப் பணிக்கு திரும்புகிறார்கள். இதேபோல நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் எம்.சண்முகவேலன், கோட்டூர்புரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.மகாலட்சுமி ஆகியோர் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவுக்கு பணியிட மாற்றப்பட்டுள்ளனர். எம்.கே.பி. நகர் காவல் நிலைய ஆய்வாளர் இ.சரவணன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட 15 காவல் ஆய்வாளர்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.