சென்னை

ரூ.1,209 கோடியில் மாமல்லபுரம் - மரக்காணம் இடையே 4 வழிச் சாலை

DIN


கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மாமல்லபுரம் - மரக்காணம் இடையேயான சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு கொள்கை அடிப்படையில் 61.4 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இச்சாலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இச்சாலை விரிவாக்கத்துக்காக மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.1,209 கோடியில் ஒப்புந்தப் புள்ளியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அண்மையில் கோரியுள்ளது. இவ்விரிவாக்கப் பணிகள் இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது. மாமல்லபுரம் முதல் முகையூர் வரையிலும், முகையூரிலிருந்து மரக்காணம் வரையிலும் இப்பணிகள் நடைபெறவுள்ளன. தற்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரையில் நான்கு வழிச்சாலையாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மரக்காணம் வரையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால் இச்சாலையில் ஏற்படும் விபத்து கணிசமான அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT