சென்னை

வருமான வரித் துறை நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு

தினமணி

வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீûஸ ரத்து செய்யக் கோரி தயாநிதிமாறன், சன் டைரக்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸின் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.
 கடந்த 2008-2009 மற்றும் 2009-2010 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி வருமான வரித்துறை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீûஸ ரத்து செய்யக் கோரி தயாநிதி மாறன், சன் டைரக்ட் மற்றும் செüத் ஏசியன் எஃப்.எம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 அம்மனுவில், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. இது குறித்து எங்களது தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்துக்கும் முறையான பதில் இல்லை. எனவே, வருமான வரித்துறை சட்ட விரோதமாக பிறப்பித்துள்ள நோட்டீûஸ ரத்து செய்ய வேண்டும். தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையை அடிப்படையாகக் கொண்டு வருமான வரித்துறை எனக்கும் எனது மனைவி உள்ளிட்டோருக்கும் நோட்டீûஸ அனுப்பியுள்ளது.
 இந்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டே நான் விடுவிக்கப்பட்டு விட்டேன்.மேலும் சன் டைரக்ட் நிறுவனத்துக்கும் எனக்கும் எந்த பொருளாதார ரீதியான தொடர்பும் இல்லை. எனவே வருமான வரிக்கணக்குகளை மறு ஆய்வு செய்யக் கோரி வருமான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீûஸ ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
 இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
 மேல் முறையீட்டு மனு: இந்த உத்தரவை எதிர்த்து தயாநிதிமாறன் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
 அக்டோபர் 22-க்கு ஒத்திவைப்பு: வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, அதுவரை வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்யக் கோரி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸின் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT