சென்னை

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

தினமணி

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினரின் அத்துமீறலைக் கூட்டுறவுத் தேர்தல் ஆணையமும், அதன் அதிகாரிகளும் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.
 திமுக சார்பில் முறைகேடுகள் குறித்து தொடுக்கப்பட்ட வழக்குகளில், பல்வேறு கூட்டுறவு சங்கத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 எனவே, முறைகேடுகளுக்கு வித்திட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் முடியும் வரை அக்.16-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்கள் அனைத்தையும் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT