முகப்பு
சென்னை

நூல் வெளியீடு

முத்தலாக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா ஆற்றிய உரை அடங்கிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை துணைத்

Updated On : 23 அக்டோபர், 2018 at 4:16 AM
பகிர்:


முத்தலாக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா ஆற்றிய உரை அடங்கிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை நூலை வெளியிட்டார்.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில், வக்பு வாரிய உறுப்பினர் பாத்திமா முசாபர் உள்ளிட்ட 5 இஸ்லாமிய பெண்கள் அதனை பெற்றுக் கொண்டனர். இந்த நூல் வெளியீட்டு விழாவில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் முகமது அபுபக்கர், தமிமுன் அன்சாரி மற்றும் ஆற்காடு நவாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.