சென்னை

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை: செப்.12 வரை விண்ணப்பிக்கலாம்

தினமணி

சென்னை மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 12 -ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட அளவில் மூன்றாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தகுதியுள்ள மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு www.skilltraining.gov.in என்ற இணையதளத்தில் வரும் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி பாடப் பிரிவுகள், அவற்றில் சேருவதற்கான கல்வித் தகுதி, இடஒதுக்கீடு போன்ற விவரங்களை இணையதளத்திலேயே பெறலாம். மேலும் தகவலுக்கு 044-2250 1530 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT