சென்னை

ஜோதிடப் புத்தகம் பறிமுதல்: பரிசீலிக்க  நீதிமன்றம் உத்தரவு

DIN


தேர்தல் பறக்கும் படையினரால் தஞ்சாவூரில் பறிமுதல் செய்யப்பட்ட  ஜோதிடப் புத்தகங்களைத் திரும்பத் தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோதிடர் ராசிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள், அதன் தலைவர்களின் ஜாதகங்களை ஆராய்ந்து ஒரு புத்தகத்தை வெளியிட்டேன். இந்தப் புத்தகங்களை தஞ்சாவூருக்கு எடுத்துச் சென்றேன். அப்போது  சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், புத்தகங்களை பறிமுதல் செய்து விட்டனர். 
பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களில் எந்தவிதமான ஆட்சேபனைக்குரிய கருத்துக்களையும் நான் தெரிவிக்கவில்லை. எனவே, என்னிடமிருந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஜோதிடப் புத்தகங்களைத் திரும்பத் தர உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் கொண்ட  அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ரஃபேல் விமான முறைகேடு தொடர்பான புத்தகங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
பின்னர், அதே நாளில் அந்த புத்தகங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. ஆனால், மனுதாரரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்ப வழங்க மாவட்ட தேர்தல் அதிகாரி மறுத்து விட்டதாக கூறி வாதிடப்பட்டது. 
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து, மனுதாரர் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுவை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT