சென்னை

பயங்கரவாதிகள் ஊடுருவல்: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

DIN


தமிழகத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை அடுத்து  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சென்னையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தலைமை வகித்தார். இதில் கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆர்.தினகரன், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பாதுகாப்புப் பணியில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது என ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் கோயம்பேடு மார்க்கெட், புறநகர் பஸ் நிலையம், உயர்நீதிமன்ற வளாகம், விமான நிலையம் ஆகியவற்றில் பொதுமக்களை போலீஸார் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அதேபோல நகர் முழுவதும் போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீஸார் தீவிர வாகனச் சோதனை செய்து வருகின்றனர். ஹோட்டல்கள், விடுதிகள், மேன்ஷன்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சந்தேகம்படும்படியாக தங்கியிருக்கும் நபர்களிடமும் போலீஸார் விசாரணை செய்கின்றனர்.  இந்தப் பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
விழிப்புடன் போலீஸார்:  தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் போலீஸார் விழிப்புடன் இருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார்.தீவிரவாதிகள் ஊடுருவியதாக வெளியான தகவலையடுத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீஸார் விழிப்புடன் உள்ளனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீவிர கண்காணிப்பு, கூட்டு ரோந்துப் பணி, கூட்டு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
பேட்டியின்போது அவருடன் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் எம்.சுதாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT