சென்னை

35 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் 35 காவல் ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 

DIN


சென்னை பெருநகர காவல்துறையில் 35 காவல் ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 
இது குறித்த விவரம்:
சென்னை பெருநகர காவல்துறையில் காவல் ஆய்வாளர்கள் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 
இதன் அடிப்படையில், சென்னை பெருநகர காவல்துறையில் போக்குவரத்துப் பிரிவில் 35 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விசுவநாதன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதில் முக்கியமாக, எழும்பூர் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் எம்.ஜெயகுமார் கோயம்பேட்டுக்கும், நுங்கம்பாக்கத்தில் இருந்த காவல் ஆய்வாளர் ஜி.ஜெயவேலு செம்மஞ்சேரிக்கும், செம்மஞ்சேரியில் இருந்த காவல் ஆய்வாளர் சீனிவாசன் நுங்கம்பாக்கத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மொத்தம் 35 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT