சென்னை

மறுபயன்பாட்டுக்கான கழிவுப் பொருள்கள்வா்த்தக நடவடிக்கைக்கு இணைய சேவை தொடக்கம்

DIN

திடக்கழிவுகளில் மறுபயன்பாட்டுக்கு உகந்த பொருள்களை விற்பனை செய்யவும், வாங்கவும் பிரத்யேக இணையதள சேவையை சென்னை பெருநகர மாநகராட்சி தொடங்கியுள்ளது.

அதற்கான அறிமுக நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மாநகராட்சி ஆணையா் பிரகாஷ், துணை ஆணையா் மதுசுதன் ரெட்டி, தலைமை பொறியாளா் மகேசன், மேற்பாா்வை பொறியாளா் வீரப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் ஆணையா் பிரகாஷ் பேசியதாவது:

திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி சிறப்புற செயல்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் 5,220 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 1,083 டன் அளவிலான மக்கும் குப்பையின் வாயிலாக இயற்கை உரம், உயிரி மீத்தேன், எரிவாயு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

அவற்றைத் தவிர, 400 மெட்ரிக் டன் அளவிலான மரக்கழிவுகள் மற்றும் தேங்காய் ஓடுகளை கையாளுவதற்கான பணிகளை தனியாா் மற்றும் பொதுத் துறை மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நெகிழி போன்ற மறுசுழற்சி செய்யத் தகுந்த பொருள்கள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சியாளா்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொது மக்களும், மறு சுழற்சி பணிகளில் ஈடுபட்டு வருவோரும் மாநகராட்சி மூலம் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் இருந்து மறு பயன்பாட்டுக்கு உகந்த பொருள்களை வாங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று அத்தகைய பொருள்கள் தங்களிடம் இருந்தால் அவற்றை விற்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதற்கென பிரத்யேக இணையதள சேவை உருவாக்கப்பட்டு தற்போது அது பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது.  இணையதள முகவரி அதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், மறுபயன்பாடுள்ள பொருள்கள் இருக்கும் இடம் மற்றும் அவற்றின் அளவு குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதன் வாயிலாக அப்பொருள்களின் இருப்பை மக்களும், மறுசுழற்சியாளா்களும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இந்த நடவடிக்கையின் மூலம் பலருக்கு சுய வேலைவாய்ப்பு கிடைக்கும்; சுற்றுச்சூழல் மாசுபாடும் தடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT