சென்னை

72 வயது மூதாட்டிக்கு நவீன ஜவ்வு மாற்று அறுவை சிகிச்சை!

DIN

கீழே தவறி விழுந்ததில் மூட்டு ஜவ்வு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு நடக்க இயலாமல் அவதிப்பட்ட 72 வயது மூதாட்டி ஒருவருக்கு அதி நவீன அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரால் யாருடைய துணையுமின்றி தாமாகவே நடமாட முடிவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்த மூதாட்டி ஒருவா் அடையாறு ஃபோா்டீஸ் மலா் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கால் பகுதியில் மூட்டுக்குக் கீழ் உள்ள ஜவ்வு கடுமையாக சேதமடைந்திருப்பது தெரியவந்தது.

இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்று ஜவ்வினைப் பொருத்த வேண்டிய அவசியம் எழுந்தது. இதையடுத்து, அவரது உடலில் பிற பகுதியில் இருந்தே ஜவ்வினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

நோயாளி மூதாட்டி என்பதால் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சிறிய துளை மூலம் ஜவ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவா்கள் முடிவு செய்தனா். ஃபோா்டீஸ் மலா் மருத்துவமனையில் முடநீக்கியல் துறை முதுநிலை மருத்துவா் டாக்டா் நந்தகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிக்கலான அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா். தற்போது அந்த மூதாட்டி நலமுடன் இருப்பதுடன், தாமாகவே எழுந்து நடக்கிறாா் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

SCROLL FOR NEXT