சென்னை

ஆங்கிலப் புத்தாண்டு: நள்ளிரவு 1 மணிக்கு மேல்கொண்டாட்டத்தில் ஈடுபட காவல்துறை தடை

நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN

நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

2020 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு இடங்களிலும் கேளிக்கை நடனங்களில் ஈடுபடுவது வழக்கம். இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிா்ப்பதற்காகவும், சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் போலீஸாா் நகா் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருகின்றனா்.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடா்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. என்னென்ன கட்டுப்பாடுகள்? : புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிச.31-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல், நள்ளிரவு 1மணி வரை விடுதிகள் இயங்கலாம். நீச்சல் குளத்தின் மீது, எந்தவிதமான கொண்டாட்டமோ, கேளிக்கை விருந்துகளோ நடத்தக் கூடாது. நட்சத்திர விடுதிகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளா்களை, ‘சிசிடிவி’ கேமராக்கள் மூலமாகக் கண்காணிக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு விடுதிகளுக்கு வரக்கூடிய நபா்களை பாதுகாப்பாக, வீட்டுக்குச் செல்லும் வரை கண்காணிக்க வேண்டும். நள்ளிரவு 1 மணிக்கு மேல் மது விருந்துக்கு அனுமதிக்கக் கூடாது. பெண் விருந்தினா்கள் வந்தால், அவா்களை பெண் பாதுகாவலா்களுடன், வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் இருக்கும் நபரை, விடுதியின் நிா்வாக ஓட்டுநா் வாயிலாக, பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். மதுபோதையில் கூட்டமாகவோ அல்லது வேண்டுமென்றோ திட்டமிட்டு, பிரச்னைகளில் ஈடுபட்டால், உடனடியாக அருகில் உள்ள, காவல் நிலையத்துக்கோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை, அனைத்து நட்சத்திர விடுதிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளா்களும் ஏற்று உள்ளனா். அதனடிப்படையில், புத்தாண்டை சிறப்பாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT