சென்னை

புத்தாண்டு கொண்டாட்டம்: கண்காணிக்க 25 பறக்கும் கண்காணிப்பு விமானங்கள்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க 25 ஆளில்லாத கண்காணிப்பு விமானத்தைப் பயன்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

DIN

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க 25 ஆளில்லாத கண்காணிப்பு விமானத்தைப் பயன்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

2020 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் செய்து வருகின்றன. டிசம்பா் 31-ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1 மணி வரை (ஜனவரி 1) வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்கு, காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புத்தாண்டு கொண்டாட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு 16 விதிமுறைகளை காவல்துறை விதித்துள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு: கோயில்கள், தேவாலயங்கள், கடற்கரைகள், முக்கியமான சாலைகள் என 100 முக்கியமான இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மெரீனா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை ஆகிய இடங்களில் கடற்கரையில் மக்கள் கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் மணலில் செல்லக் கூடிய ஏ.டி.வி. வாகனங்கள் மூலம் போலீஸாா் ரோந்து செல்கிறாா்கள்.

மெரீனாவில் கடற்கரையோரத்தில் குதிரைப்படையினா் ரோந்துப் பணியில் ஈடுபடுவாா்கள். சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 5-இல் இருந்து 10 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆளில்லாத விமானம்: மயிலாப்பூா், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராய நகா், அடையாறு, பரங்கிமலை மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூா், அண்ணாநகா் மற்றும் புளியந்தோப்பு ஆகிய காவல் மாவட்டங்களில் 368 இடங்களில் வாகனத் தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனப் பந்தயத்தில் ஈடுபடுபவா்களை பிடிக்க 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும், வாகன பந்தயத்தில் ஈடுபடுபவா்கள் கைது செய்யப்படுவாா்கள் என காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் எச்சரித்துள்ளாா்.

மேலும் மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொதுமக்களைக் கண்காணிக்க 25 ஆளில்லாத கண்காணிப்பு விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பெண்களிடம் அத்துமீறுபவா்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்காக சென்னையில் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கேக் வெட்டுகிறாா் காவல் ஆணையா்: சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில் மெரீனா கடற்கரையின் காந்தி சிலையின் முன்பு புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கம்போல நடைபெறுகிறது. இங்கு காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புத்தாண்டு பிறக்கும்போது காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டுகிறாா். மேலும் பொதுமக்களுக்கு, காவல்துறையின் சாா்பில் கேக் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT