சென்னை

கூகுள் மேப் மூலம் மாநகராட்சி பொது கழிப்பிடத்தை தெரிந்து கொள்ளலாம்

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை கூகுள் மேப் மூலம் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 853 இடங்களில் 6,701 இருக்கை வசதிகள் கொண்ட பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
 மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, கூகுள் மேப் நிறுவனம் ஆகியவை இணைந்து சென்னையில் உள்ள பொதுக் கழிப்பிடங்களை கூகுள் மேப்பில் பதிவு செய்துள்ளது.
 பொதுமக்கள் கூகுள் மேப்பில் ற்ர்ண்ப்ங்ற் என டைப் செய்தால் தங்கள் அருகாமையில் உள்ள பொதுக் கழிப்பிடங்களின் விவரங்கள், இருப்பிடம், முகவரி ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், பொதுக் கழிப்பிடத்தின் தூய்மை, சுகாதாரம் குறித்த தங்களின் மதிப்பீடு, கருத்துகளைத் தெரிவிக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT