சென்னை

பிப்.20-இல் வீட்டினுள் அலங்கார தோட்டம் அமைத்தல் பயிற்சி

DIN

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், வீட்டினுள் அலங்காரத்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரிப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி அண்ணாநகரில் வரும் புதன்கிழமை (பிப்.20) நடைபெறுகிறது. மண்புழு உரம் தயாரிப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி வியாழக்கிழமை(பிப்.21) நடைபெறுகிறது.
 சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை அண்ணாநகரில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், வீட்டினுள் அலங்காரத் தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரிப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வரும் புதன்கிழமை(பிப்.20) நடைபெறுகிறது. இதுதவிர, மண்புழு உரம் தயாரிப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி வியாழக்கிழமை(பிப்.21) நடைபெறவுள்ளது.
 இந்தப் பயிற்சியானது மகளிர், மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். இந்தப் பயிற்சி வகுப்பு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.600. இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
 கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், எண்.யு-30, 10 -ஆவது தெரு, (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்), அண்ணாநகர் என்னும் முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். இந்த தகவல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத் தலைவர் அ.சதாசக்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT