சென்னை

புளியந்தோப்பு பகுதியில் 755 கண்காணிப்பு கேமராக்கள்

DIN

சென்னை புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலைகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 755 கண்காணிப்பு கேமராகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விசுவநாதன் தொடக்கி வைத்தார்.
 குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறியவும், அவர்களைக் கண்காணிக்கவும் சென்னை மாநகரம் முழுவதும் சட்டம், ஒழுங்கு காவல் மற்றும் போக்குவரத்து காவல் சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
 மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் சென்னை பெருநகரின் முக்கிய சாலைகளில் குறைந்தபட்சம் 40 மீட்டருக்கு ஒரு கேமரா பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் வடசென்னையில் புளியந்தோப்பு போக்குவரத்து உட்கோட்டத்தில் பேப்பர்மில்ஸ் சாலை (2.5 கி,மீ) . மாதவரம் நெடுஞ்சாலை (2 கி.மீ) எம்.பி.எம். தெரு மாதவரம் நெடுஞ்சாலை முதல் பி.பி. சாலை வரை (900 மீ), பேசின் பாலம் யானைக்கவுனி மேம்பால சாலை (1.1 கி,மீ) , எருக்கஞ்சேரி சாலை (2. 5 கி,மீ) ஆகியவை உள்பட அந்தப் பகுதியில் சுமார் 17.1 கி.மீ தொலைவுக்கு 755 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 இந்தக் கேமராகளின் செயல்பாட்டை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் கொடுங்கையூர் போக்குவரத்து சரகத்துக்குட்பட்ட ஜி.என்.டி. சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
 இதன் மூலம் புளியந்தோப்பு பகுதியின் முக்கிய சாலைகள் 100 சதவீதம் காவல்துறை கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 110 கேமராகள் தனியார் நிறுவனம் மூலம் பொருத்தப்பட்டுள்ளன.
 இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஏ.அருண், இணை ஆணையர் நஜ்மல்ஹோடா உள்பட காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT