சென்னை

"காசநோயை ஒழிக்க புதிய திட்டங்கள்'

DIN

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்காக பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாமை அவர் சனிக்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:

காசநோயை ஒழிப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, காசநோய்க்கு 18-இலிருந்து 24 மாதங்கள் வரை சிகிச்சை பெற வேண்டிய நிலையை மாற்றி 9-இலிருந்து 12 மாதங்களுக்குள் அந்நோயை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள்  தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை வழங்கும் திட்டம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக இதுவரை 1.7 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் 35 மாவட்ட காசநோய் மையங்கள், 461 காசநோய் சிகிச்சை நிலையங்கள், 1,984 நுண் ஆய்வு மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும் அரசு மருத்துவமனைகளின் மூலம் 86 ஆயிரம் காசநோயாளிகளுக்கும், தனியார் மருத்துவமனைகள் மூலம் 33 ஆயிரம் காச நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளன.

2030-க்குள் காசநோய் இல்லாத தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவுகளில் ஒன்று. அந்த இலக்கை 2025-க்குள்ளாகவே தமிழகம் எட்டிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனை சாத்தியமாக்குவதற்காக தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து அந்த நோயின் தாக்கம் குறித்த கணக்கெடுப்பு ரூ. 9.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், காச நோயைக் கண்டறியும் நவீன பரிசோதனை வசதிகள் ரூ. 17.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் அவர். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.சரோஜா,  துரைக்கண்ணு,  கடம்பூர் ராஜூ, சேவூர்  எஸ்.ராமச்சந்திரன், சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், மாநில காசநோய் அலுவலர் டாக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT