சென்னை

குழந்தைகள் விளையாட்டு, பொழுதுபோக்கு திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்'

DIN

குழந்தைகள் விளையாட்டு, பொழுதுபோக்குத் திட்டத்தில் சேருவதற்கு, ஆர்வமுள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சமூகப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவின் சார்பில் குழந்தைகள் விளையாட்டு, பொழுதுபோக்கு தொடர்பான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக குழந்தைகள் இல்லங்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ள குழந்தைகள் இல்லங்கள் இளைஞர் நீதிச் சட்டத்தின்கீழ் பதிவு பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் இல்லத்தின் மீது எந்த வழக்கும் இருக்க கூடாது. இல்லங்களில் உள்விளையாட்டு அரங்கமும், வெளிப்புற விளையாட்டுத் திடல் இருப்பதுடன், மத்திய அரசின் நீதி ஆயோக்கில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சிறுவர்களுக்கான அரசின் குழந்தைகள் இல்லம், எண்: 58 சூரியநாராயணா சாலை, ராயபுரம், சென்னை-13 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், 044 25952450 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT