சென்னை

நூற்றாண்டைக் கடந்து  தரமான சேவை: சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அங்கீகாரம்

DIN

மனித குலத்துக்கு உதவும் விதமாக, நூற்றாண்டைக் கடந்து தரமான வானிலை தரவுகளை வழங்கி சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அளவிலான அங்கீகாரத்தை உலக வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது. 
இன்றைய காலகட்டத்தில், வேளாண்மை, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து, ராணுவ நடவடிக்கைகள், சுற்றுலா, விளையாட்டு மற்றும் நீர்நிலைகளைத் தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வானிலை உதவுகிறது. மனித வாழ்வியலோடு தவிர்க்க முடியாத ஒன்றாக வானிலை இருக்கிறது. வெவ்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு அறிஞர்கள் வானிலை தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டறிந்து உதவியுள்ளனர். 
இந்தியாவில்  முதல்முறையாக 1792-ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் புயல், கனமழை, குளிர் மற்றும் வெப்பநிலை பல்வேறு முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது.
பல்வேறு புயல்களின் நகர்வை துல்லியமாக கணித்து, சேதம் மற்றும் உயிரிழப்பை குறைத்ததில் சென்னை வானிலை ஆய்வு மையம்  முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த மையம்  சுமார் 140 ஆண்டுகளுக்கும் மேலாக, வானிலை விவரங்களை ஒரு நாள் கூட தவறாது பதிவு செய்து வருகிறது.  இதன் நூற்றாண்டை கடந்த வானிலை சேவையை உலக வானிலை ஆய்வு நிறுவனம் அங்கீகரித்து, சான்றளித்து, கௌரவித்துள்ளது.


மகிழ்ச்சி...


சென்னை வானிலை ஆய்வு மைய  இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: 

நீண்டகாலமாக தரமான வானிலை தரவுகளை வழங்கிவரும் வானிலை ஆய்வு மையத்தை கௌரவிக்க உலக வானிலை ஆய்வு நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில், 100 ஆண்டுகளுக்கு மேலாக தரமான வானிலை தரவுகள் வழங்கி வருவதற்காக நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தை தேர்வு செய்து,  உலக அளவிலான அங்கீகாரத்தை உலக வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த மையத்தில் இதுநாள் வரை பணியாற்றிய, பணியாற்றி வரும் எல்லா நிலை பணியாளர்களின் கடும் உழைப்பால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இடைவிடாது வானிலைத் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை அங்கீகரித்து, உலக வானிலை ஆய்வு நிறுவனம் சான்றளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோன்ற அங்கீகாரம் திருவனந்தபுரம், மும்பை, கோவா, புனே ஆகிய வானிலை ஆய்வு மையங்களுக்கும் கிடைத்துள்ளது. தற்போது ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த

18-ஆவது உலக வானிலை காங்கிரஸ் மாநாட்டில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT