சென்னை

சிறப்பாசிரியர் பணி நியமனம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

DIN


சென்னை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தையல், 
ஓவியம், இசை ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்று இன்னும் பணி நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
சிறப்பாசிரியர்களுக்கான உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 1,300 பேரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 
இந்தத் தேர்வினை 30 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 2018-ஆம் ஆண்டு வெளியிட்டது. ஆனால், இதுவரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. 
எனவே, தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது, தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டி பல்வேறு முறை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளோம். ஆனால், இதுவரை பணி வழங்கவில்லை. இந்த முறையாவது பணி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT