சென்னை

குற்ற வழக்கை மறைத்து  பதிவு:  வழக்குரைஞருக்கு தடை

DIN


தன் மீதான குற்ற வழக்கை மறைத்து, வழக்குரைஞராகப் பதிவு செய்தவரை  வழக்குரைஞராகச் செயல்பட தடை விதித்து தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
  சென்னை, வடபழனியைச் சேர்ந்த வழக்குரைஞர் வசந்த மூர்த்தி மீது, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சிலில் சங்கர் என்பவர் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரில், வசந்த மூர்த்தி தன் மீதான குற்ற வழக்கை மறைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் புகார் குறித்து விசாரித்த, மூத்த வழக்குரைஞர் சிங்காரவேலன் தலைமையிலான தமிழ்நாடு- புதுச்சேரி பார்கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை குழு, குற்ற வழக்குகளை மறைத்து வழக்குரைஞராகப் பதிவு செய்வதை ஏற்க முடியாது.
எனவே வசந்த மூர்த்தி, தன் மீதான குற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படும் வரை, அவரது வழக்குரைஞர் பதிவை நிறுத்திவைப்பதாகவும், அதுவரை,  வழக்குரைஞராக பணியாற்ற தடைவிதிப்பதாகவும்  உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT