சென்னை

பள்ளிகளுக்கு 50 நாள்கள் கோடை விடுமுறை: ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு

DIN

நிகழாண்டில் பள்ளிகளுக்கு 50 நாள்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை நடைபெறும் மூன்றாம் பருவ பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 12-ஆம் தேதி நிறைவடைகின்றன.
 மக்களவைத் தேர்தல் காரணமாக, பள்ளிகளுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க வேண்டுமென, பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்வுகள் நிறைவடைத்தொடர்ந்து, பள்ளிகளுக்கு, ஏப்ரல் 13 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை 50 நாள்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் 3-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள்
 திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

SCROLL FOR NEXT