சென்னை

மனநல விழிப்புணர்வுக்காக டிரையத்லான் போட்டி

DIN


மனநல விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக டிரையத்லான் விளையாட்டு போட்டிகள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணிக்காது, அவர்களை பேணிக் காப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ராமச்சந்திரா மருத்துவக் கல்வி நிறுவன மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ஓட்டப் பந்தயம், மிதிவண்டிப் போட்டி, தடை தாண்டுதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் டிரையத்லான் என அழைக்கப்படுகிறது; அவற்றின் வாயிலாக சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவற்கான சிறிய முயற்சி இது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT