சென்னை

மக்களவைத் தேர்தல் வாகன சோதனை: ஒரே நாளில் 8 கிலோ தங்கம், 83 கிலோ வெள்ளி, ரூ.62 லட்சம் பறிமுதல்

DIN


மக்களவைத் தேர்தலையொட்டி, சென்னையில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 8 கிலோ தங்கம், 83 கிலோ வெள்ளி, ரூ.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு  இடைத் தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காகவும், வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதைத் தடுக்கவும் 77 பறக்கும் படைகள், 77 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், சென்னை முழுவதும் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 கிலோ தங்கம் பறிமுதல்: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி பறக்கும் படையினர் பூக்கடை வால்டாக்ஸ் சாலையில் வெள்ளிக்கிழமை வந்த ஒரு காரை வழிமறித்து சோதனையிட்டனர். இச் சோதனையில் அந்த காரில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 7 கிலோ எடையுள்ள தங்க நகைகள், தங்கக் கட்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல அந்தப் பகுதியில் வந்த மற்றொரு காரை சோதனை செய்ததில், அதில் போதிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1.9 கிலோ தங்க நகைகளும், ரூ. 30 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
பூக்கடை அனுமந்தராயன் தெருவில் வந்த ஒரு காரை போலீஸார் சோதனையிட்டனர். இச் சோதனையில் போதிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 83 கிலோ வெள்ளிப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ரூ.31 லட்சம் பறிமுதல்: இதுபோல் புரசைவாக்கம் வள்ளியம்மாள் சாலை, அழகப்பா சாலை சந்திப்பில் வந்த ஒரு காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அந்த காரில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.31.88 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் 8 கிலோ தங்கம், 83 கிலோ வெள்ளி, ரூ.62 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் வருவாய்த் துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. பின்னர் அவை, அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT