சென்னை

சட்டக் கல்லூரி மாணவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி

DIN

சென்னை மெரீனா கடற்கரை நேப்பியர் பாலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 தரமணி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர்  கு.தீரஜ்குமார் (24), இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிபிரபு (24), மோகன்ராஜ் (24). இவர்கள் சென்னையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் 3 பேரும் வெள்ளிக்கிழமை இரவு தீவுத்திடலில் நடைபெறும் அரசு சுற்றுலா பொருள்காட்சியை பார்க்கச் சென்றனர்.
பொருள்காட்சியைப் பார்த்துவிட்டு 3 பேரும் மெரீனா கடற்கரை நேப்பியர் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி, சட்டக் கல்லூரி மாணவர்கள் வைத்திருந்த பணம், 3 செல்லிடப்பேசிகளைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர். இது குறித்து  கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப்  புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT