சென்னை

"ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் சிறப்பு மருத்துவமனை தொடங்க நடவடிக்கை'

DIN

சென்னையைச் சுற்றிலும் புறநகர்ப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பயன்பெறும் வகையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை போல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் புதிதாக பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் என்று ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாமக  வேட்பாளர் டாக்டர் ஏ.வைத்தியலிங்கம் கூறினார்.
தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் இந்த தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, தாம்பரம் சானடோரியத்தில் தொடங்கப்பட்ட தேசிய சித்த மருத்துவமனை, இப்பகுதி மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ சேவை அளித்து வருகிறது.
சென்னை புறநகர்ப் பகுதியில் அனைத்து வசதிகளும் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தேவை என்று பல்வேறு நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் தேவைகளை நிறைவேற்றி தரும் வகையில், நான் வெற்றி பெற்றால் சிறப்பு மருத்துவமனை அமைக்க முயற்சி எடுப்பேன் என்றார் டாக்டர் ஏ.வைத்தியலிங்கம். 
கூட்டத்தில் அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலர் சிட்லபாக்கம் சி.ராஜேந்திரன், தாமஸ்மலை ஒன்றிய செயலாளர் என். சி. கிருஷ்ணன் பாஜக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT