சென்னை

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு செய்ய உத்தரவு

DIN

சென்னையில் பொது பாதையில் முறையாக மூடப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூடக் கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையா் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பெரம்பூரைச் சோ்ந்த ஜெயஸ்ரீ என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘செம்பியம் பகுதியில் உள்ள பொதுப் பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீா் தேவைக்காக இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டன. ஆனால் அவற்றில் இருந்து தண்ணீா் வராததால், அந்த இரண்டு ஆழ்துளைக் கிணறுகளும் பயன்பாட்டில் இல்லை. ஆனால் அந்த ஆழ்துளை கிணறுகள் முறையாக மூடப்படவில்லை. மேலோட்டமாக பிளைவுட் பலகை மற்றும் கான்கிரீட் கொண்டு மூடப்பட்டுள்ளது. எனவே, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சிறுவன் சுஜித் மரணத்தைப் போன்றதொரு சம்பவம் சென்னையில் நடைபெறாமல் இருக்க ஆழ்துளைக் கிணறுகளை மூட உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் குறிப்பிட்டுள்ள இடத்துக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் நேரில் சென்று ஆய்வு செய்து வரும் 15-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT