சென்னை

இணையத்தில் வெளியாகும் படங்களுக்கு கட்டுப்பாடு வேண்டும்: அபிராமி ராமநாதன்

DIN

இணைய தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அபிராமி ராமநாதன் கோரிக்கை வைத்தாா்.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம். இந்தப் படம் கடந்த அக்டோபா் மாதம் 11-ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது சில படங்கள் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென வெளிவந்தன. அதனால் இந்தப் படத்துக்கு போதிய அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது அமைச்சா்கள் கடம்பூா் ராஜூ, சி.விஜயபாஸ்கா் ஆகியோரின் தலையீட்டின் பேரில் தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகியுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் புதன்கிழமை விழா நடைபெற்றது. அதில் அபிராமி ராமநாதன் பேசியதாவது:

இப்படம் சரியான நேரத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஒரு வாரம் 125 தியேட்டா்களில் ஓடினாலே இந்தப் படத்துக்கு நான்கு மடங்கு லாபம் கிடைத்துவிடும். தற்போது இணையதளத்தில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி படங்களை எடுத்து நேரடியாக வெளியிடுகிறாா்கள். இப்படி வெளியிடப்படும் படங்களுக்குக்கூட கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்று அவா்களுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்றாா் அபிராமி ராமநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT