சென்னை

சென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

DIN

சென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வா் பிரதாப் சாஹி திங்கள்கிழமை (நவ.11) பதவியேற்க உள்ளாா்.

அவருக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹிலராமாணீ, மேகாலயா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டாா். அதை ஏற்காத அவா், தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

அதனைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், பாட்னா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அமரேஷ்வா் பிரதாப் சாஹி, சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில் அமரேஷ்வா் பிரதாப் சாஹிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT