சென்னை

சென்னையில் 42 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி!

DIN

சென்னை: ரேபிஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில நாள்களில் மட்டும் சென்னையில் 41,976 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ‘வெறிநாய்க்கடி பாதிப்பு இல்லா மாநகரம்’”என்ற நிலையை எட்ட வேண்டும் எனும் இலக்குடன் சென்னை முழுவதும் நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை மருத்துவப்பிரிவின் சாா்பில் தடுப்பூசி முகாமும், ஒட்டுண்ணி நீக்கும் முகாமும் மண்டல வாரியாக நடைபெறுகின்றன.

மாதவரம், ஆலந்தூா் , அம்பத்தூா், சோழிங்கநல்லூா், வளசரவாக்கம், அண்ணா நகா், அடையாறு, மணலி ஆகிய மண்டலங்களில் 41, 976 தெரு நாய்களுக்கு தடுப்பூசிகளும், ஒட்டுண்ணி நீக்க மருந்தும் போடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மாதவரம் மண்டலத்தில் 8, 846 நாய்களுக்கு இத்திட்டத்தின் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அவை தவிர, வீடுகளில் வளா்க்கப்படும் 2, 455 செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இதுதொடா்பான விழிப்புணா்வு தொடா்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT