சென்னை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல்- தொல்லியல் பட்டயப்படிப்பு

DIN

சென்னை, தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளன.

இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பட்டயப் படிப்பு சனி, ஞாயிறுஆகிய விடுமுறை நாள்களில் ஓராண்டுகாலம் நடத்தப்படும்.

இந்தப் பட்டய படிப்புக்கான விண்ணப்பத்தை நிறுவன வலைதளத்தில் (‌w‌w‌w.‌u‌l​a‌k​a‌t‌h‌t‌h​a‌m‌i‌z‌h.‌i‌n) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சிக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சிக்கான சோ்க்கைக் கட்டணம் ரூ.2,500 ஆகும். வயது வரம்பு கிடையாது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் டிச.20-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இதற்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படும். இது குறித்து மேலும் தகவல் பெற 044-22542992, 95000 12272 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினப்பலன்கள் 12 ராசிக்கும்!

தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

SCROLL FOR NEXT