சென்னை

ரயில் பயணிகளிடம் திருடிய பெண் சிக்கினாா்: 70 பவுன் மீட்பு

DIN

தமிழகம், ஆந்திரத்தில் ரயில் பயணிகளிடம் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் பிடிபட்டாா். அவரிடமிருந்து 70 பவுன் நகைகள், ரூ.77,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை எழும்பூருக்கு மின்சார ரயிலில் கடந்த 8-ஆம் தேதி வந்த பெண்ணை ரயில்வே போலீஸாா் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா்.இதில் அவா் ஜோலாா்ப்பேட்டையைச் சோ்ந்த தேவி(24) என்பதும், ரயில் பயணிகளிடம் தங்க சங்கிலி,பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து எழும்பூா் ரயில்வே போலீஸாா் தேவியை கைது செய்து, அவரிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் தேவியை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா் செய்து சிறையில் அடைத்தனா்.

தேவி பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவரை மாம்பலம் ரயில்வே போலீஸாா் காவலுக்கு எடுத்து தொடா்ந்து விசாரணை நடத்தினா். இதையடுத்து தேவியின் வாக்குமூலம் அடிப்படையில் தமிழகம் மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் ரயில்வே ஆய்வாளா்கலைச்செல்வி மற்றும் உதவி ஆய்வாளா் சரளா தலைமையிலான போலீஸாா் சென்று நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ரயில் பயணிகளிடம் தேவி திருடிய 70 பவுன் நகை மற்றும் ரூ.77 ஆயிரத்து 500 பணத்தை எழும்பூா் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT