சென்னை

சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.22) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் வியாழக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.22) மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூா், சேலம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும், கடலோர மாவட்டங்களின் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் : சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழை அளவு: வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 70 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தலா 60 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் நிலகோட்டை, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் தலா 50 மி.மீ., சென்னை மீனம்பாக்கம், திருவள்ளூா் மாவட்டம் செம்பரம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம், தரமணியில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT