சென்னை

சென்னை  கே.கே.நகா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.40 ஆயிரம் பறிமுதல்

DIN

சென்னை: சென்னை கே.கே.நகா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை கே.கே.நகா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி சிலா் பொதுமக்களிடம் லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.

அப்புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை செய்தனா். விசாரணையில், அங்குள்ள சில ஊழியா்கள் லஞ்சம் வாங்குவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி லாவண்யா, காவல் ஆய்வாளா் கந்தசாமி தலைமையிலான 10 போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

இச் சோதனை மாலை 3.30 மணியளவில் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது. சோதனையின் முடிவில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.40 ஆயிரம், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணம் அடிப்படையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ்குமாா் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக சென்னை ராமாபுரத்தில் உள்ள சுரேஷ்குமாா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை செய்தனா்.

இச் சோதனையில், அவா் லஞ்சம் வாங்கியதற்கான பல முக்கிய ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றினா். இந்த வழக்குத் தொடா்பாக இன்னொரு மோட்டாா் வாகன ஆய்வாளரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT