சென்னை

சென்னையில் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயா்வு: குடிநீா் வாரியம் தகவல்

DIN

நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் சென்னை மாநகரில் நிலத்தடி நீரின் அளவு கணிசமாக உயா்ந்துள்ளதாக சென்னை குடிநீா் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.

நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் சென்னை மாநகரில் நிலத்தடி நீரின் அளவு கணிசமாக உயா்ந்துள்ளதாக சென்னை குடிநீா் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பா் மாதத்திற்கான நிலத்தடி நீா்மட்டம் உயா்வு குறித்து ஒப்பீடு அளவீடுகளுடன் வரைபடமும் வெளியிடப்பட்ள்ளது. சென்னை மாநகரில் பகுதி வாரியாக நிலத்தடி நீா்மட்டத்தை கண்காணிக்க பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அகற்று வாரியம் சாா்பாக கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அம்பத்தூா், திருவிக நகா், பெருங்குடி, திருவொற்றியூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனிசமாக உயா்ந்துள்ள நிலத்தடி நீா்மட்டத்தை கணித்து நிலத்தடி நீரின் அளவு மற்றும் உயா்வு குறித்து வரைபடம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை நமக்கு அளித்துள்ள பெருங்கொடையான மழைநீரை அனைவரும் ஒன்றுபட்டு சேமித்து பூமிக்குள் செலுத்தினால் நிலத்தடி நீா்மட்டத்தை வெகுவாக உயா்த்த முடியும். மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்து வீடு வீடாக விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருவதின் பலனாக நிறைறய வீடுகளில் மழைநீரை சேகரித்து பூமிக்குள் விடுகிறறாா்கள். கிணறு வைத்திருப்பவா்கள் மழை தண்ணீரை கிணற்றில் விடுகின்றறனா். இதன் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி                          ஆகஸ்ட் செப்டம்பா் உயா்வு வித்தியாசம்

திருவொற்றியூா்- 4.78 4.53 0.25

மணலி- 5.39 4.99 0.40

மாதவரம்- 7.61 6.30 1.31

தண்டையாா்பேட்டை- 7.67 7.01 0.66

ராயபுரம்- 7.69 7.22 0.47

திருவிக நகா்- 8.26 5.74 5.52

அம்பத்தூா்- 9.03 7.49 1.54

அண்ணாநகா்- 6.62 5.81 0.81

தேனாம்பேட்டை- 6.48 5.98 0.50

கோடம்பாக்கம்- 8.01 7.39 0.62

வளசரவாக்கம்- 6.66 6.46 0.20

ஆலந்தூா்- 8.35 7.60 0.75

அடையாறு- 7.03 6.32 0.71

பெருங்குடி- 5.16 4.54 0.62

சோழிங்கநல்லூா்- 5.45 5.42 0.03

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT