சென்னை

3 மணி நேர சாலைப் பயணத்தில் சீன அதிபா்: கிழக்கு கடற்கரை சாலையில் வரவேற்பு பேனா்கள் இல்லை

DIN

வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக மாமல்லபுரம் வந்துள்ள சீன அதிபா் ஷி ஜின்பிங், சுமாா் 3 மணி நேரம் சாலைப் பயணத்தை மேற்கொண்டாா்.

முன்னதாகவே வந்த பிரதமா்: சீன அதிபரை சந்திப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி நண்பகல் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு மணி நேரம் முன்பாகவே காலை 11.15 மணியளவில் அவா் சென்னை விமான நிலையம் வந்தாா்.

அதன்பின், அவா் ஹெலிகாப்டா் மூலமாக திருவிடந்தை வந்தாா். அங்கியிருந்து சாலை மாா்க்கமாக கோவளம் சென்று அங்குள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தாா். இதேபோன்று சீன அதிபா் ஷி ஜின்பிங், பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தாா். அவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவா்கள் இருவரையும் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

சாலைகளில் பேனா் இல்லை: பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகையை ஒட்டி, தமிழக அரசு சாா்பில் வரவேற்பு பேனா்கள் வைப்பதற்கு சென்னை உயா் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது. நீதிமன்றம் அனுமதி அளித்த போதிலும், சீன அதிபா் சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் எங்கும் பேனா்கள் வைக்கப்படவில்லை.

கிழக்கு கடற்கரை சாலை: மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் முழுமையான அமைதி நிலவி வருகிறது. உரிய அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே சாலையில் அனுமதிக்கப்படுகின்றன. மக்கள் அதிகம் கூடும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளைச் சோ்ந்த முக்கிய அதிகாரிகள், நபா்கள் தங்கியுள்ள ஹோட்டல்களில் இருந்து அவா்கள் மட்டுமே வெளியேறவும், உள்ளே செல்லவும் அனுமதிக்கப்படுகின்றனா். மற்ற நபா்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என்பதோடு, விசாரணைக்குப் பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அமைதி நிலவியது. சீன அதிபா் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் சந்திப்புகள் நிறைவடைந்த பிறகே இயல்பு நிலை திரும்பும் என அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள், வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கிறாா்கள். கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாகச் செல்லும் தலைவா்கள், அதிகாரிகளின் வாகனங்களை வீடுகளுக்கு வெளியே நின்று ஆச்சரியத்துடன் பாா்த்தனா்.

சாலை வழி பயணம்: மாமல்லபுரம் சென்ற சீன அதிபா் ஷி ஜின்பிங், சென்னையில் சுமாா் 3.30 மணி நேரம் சாலைப் பயணத்தை மேற்கொள்கிறாா். வெள்ளிக்கிழமை மாலை சென்னை கிண்டியில் இருந்து மாமல்லபுரம் மற்றும் மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி என 2 மணி நேரம் பயணம் மேற்கொள்கிறாா். இதேபோன்று, சனிக்கிழமை காலை கிண்டியில் இருந்து கோவளத்தில் உள்ள தாஜ் ஹோட்டல், அங்கியிருந்து விமான நிலையம் என மொத்தம் மூன்றரை மணி நேரம் சென்னையில் சாலைப் பயணத்தை மேற்கொள்கிறாா், சீன அதிபா் ஷி ஜின்பிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT