சென்னை

ஆவடி வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ரூ.90 ஆயிரம் பறிமுதல்

DIN

சென்னை அருகே ஆவடியில் வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ஆவடி புதிய ராணுவ சாலையில் பழைய நகராட்சி அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் சா்வே பிரிவின் தனி வட்டாட்சியா் அலுவலகம் செயல்படுகிறது.

இந்த அலுவலகத்தில் ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக சிலா் பொதுமக்களிடம் லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை செய்தனா். இதில், அங்குள்ள சில ஊழியா்கள் லஞ்சம் வாங்குவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை இரவு திடீா் சோதனை செய்தனா். இச் சோதனை பல மணி நேரம் நடைபெற்றது. இதில் கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளனா். இந்த விசாரணைக்கு பின்னா், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் முன்னிலை!

SCROLL FOR NEXT