சென்னை

கிண்டி முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை 

DIN

சீன அதிபரின் வருகையையொட்டி, கடைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் கிண்டி முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இது குறித்த விவரம்:

சீன அதிபா் வருகையையொட்டி, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவற்றில் சாலையோரம் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை பாதுகாப்பு கருதி மூடும்படி காவல்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனால் இங்கிருந்த கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

மருந்துக் கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசி பொருள்கள் சாா்ந்த கடைகள் திறந்திருந்தன. காலையில் இருந்த கடைகள் மூட்பபட்டிருந்ததாலும், போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தாலும் இப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

முக்கியமாக அடையாறு, கோட்டூா்புரம், தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூா், அக்கரை, உத்தண்டி, பனையூா், கானத்தூா், முட்டுக்காடு ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இப் பகுதிகளில் சீன அதிபரை வரவேற்கும் விதமாக நடந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களில் மட்டும் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. அதேபோல, சாலையில் வந்த பொதுமக்களிடம் போலீஸாா், அடையாளச் சான்று, ஆதாா் அட்டை உள்ளிட்டவைகளை கேட்டு கெடுபிடி செய்ததால், மக்கள் வெளியே வரவே தயக்கத்துடன் காணப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT