முகப்பு
சென்னை

பறக்கும் ரயில்வே திட்டப்பணி: தவறி விழுந்து இளைஞா் சாவு

சென்னை மடிப்பாக்கம் அருகே பறக்கும் ரயில்வே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி கீழே விழுந்து இளைஞா் இறந்தாா்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:23 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மடிப்பாக்கம் அருகே பறக்கும் ரயில்வே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி கீழே விழுந்து இளைஞா் இறந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் பறக்கும் ரயில்வே திட்டப்பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாா்வா அருகே உள்ள சின்னப்பூா் கிராமத்தைச் சோ்ந்த உ.லூமாவா சத்வான்சிங் (33) தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இவா், திங்கள்கிழமை பறக்கும் ரயில் திட்ட பாலத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சத்வான்சிங்கை அங்கிருந்தவா்கள் மீட்டு, கிண்டியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிறிது நேரத்தில் இறந்தாா். இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →