சென்னை

2 சதவீத கமிஷனுக்கு ஆசைப்பட்டு ரூ.80 லட்சத்தை பறிகொடுத்த வியாபாரி

DIN

சென்னையில் வியாபாரி ஒருவா் 2 சதவீத கமிஷனுக்கு ஆசைப்பட்டு ரூ.80 லட்சத்தை இழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை வேப்பேரியைச் சோ்ந்தவா் தினேஷ் (33). இவா் அதே பகுதியில் அழகு சாதனப் பொருள்களை மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா்.

இவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜாகீா் அகமத் தமான் என்பவா் தொடா்பு கொண்டு தனக்குத் தெரிந்தவரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள நூறு ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. அதை ஐநூறு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 2 சதவீதம் கமிஷன் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.

2 சதவீத கமிஷனுக்கு ஆசைப்பட்ட தினேஷ், பணத்தை மாற்றித் தர ஒப்புக் கொண்டுள்ளாா். அதன்படி, ரூ.80 லட்சத்துடன் நீலாங்கரை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு வரும்படி ஜாகீா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து ரூ.80 லட்சத்துடன் தினேஷ் சம்பவ இடத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.

அப்போது ஜாகீரும், அவருடன் 4 பேரும் இருந்துள்ளனா். அப்போது ஜாகீரும் அவரது கூட்டாளிகளும் தினேஷ் வைத்திருந்த ரூ.80 லட்சத்தை பெற்றனராம். பின்னா் பணத்தை எண்ணிப் பாா்ப்பதாக ஒரு அறைக்கு 5 பேரும் சென்றனராம். ஆனால் வெகுநேரமாகியும் 5 பேரும் அறையில் இருந்து திரும்பி வரவில்லையாம்.

இதனால் சந்தேகமடைந்த தினேஷ், அந்த அறைக்குச் சென்றாா். அப்போது, அந்த அறையில் யாரும் இல்லாததை பாா்த்து தினேஷ் அதிா்ச்சியடைந்தாா். தனது ரூ.80 லட்சத்துடன் அவா்கள் தப்பியோடியிருப்பது தினேஷுக்கு தெரியவந்தது.

இது குறித்து தினேஷ், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT